தென்காசியில் கிராமப்புற மின் வணிகத் தளம் "கொற்றவை - இ-காமர்ஸ் ஸ்டோர்" அறிமுகம்
கிராமப்புற மின் வணிகத் தளம் "கொற்றவை - இ-காமர்ஸ் ஸ்டோர்" அறிமுகம்;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் கோவிந்த பேரியில் பீடி சுற்றும் பெண்களை தொழில் முனைவோர் ஆக்கும் முன்னெடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஶ்ரீதர் வேம்பு குத்து விளக்கேற்றி இந் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். கிராமப்புற பெண்கள் தங்களது கைவினைப் பொருட்களை ஆன்லைனில் விற்கலாம் வீட்டில் இருந்தபடியே உலகம் முழுவதும் வர்த்தகம் செய்ய வாய்ப்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்டம் கோவிந்தப் பேரியில் இந்தியாவின் முதல் கிராமப்புற மின் வணிகத் தளம் "கொற்றவை - இ-காமர்ஸ் ஸ்டோர்* அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. ஜோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். கிராமப்புற பெண்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது தயாப்புகளை, படைப்புகளை உலகம் முழுவதும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய ஏதுவாக பிரத்தியேக மின் வணிக தளமாக "கொற்றவை" தளம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக கிராமப்புற பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த "கொற்றவை" வணிக தளம் அறிமுக விழா தென்காசி மாவட்டம், கடையம் கோவிந்தபேரியில் அமைந்துள்ள கலைவாணி கல்வி மையத்தில் நடைபெற்றது. கொற்றவை தளத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி காருண்யா குணவதி அனைவரையும் வரவேற்று நிறுவனரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கொற்றவை தளம் குறித்துப் பேசினார். இந்த விழாவில் தலைமை விருந்தினராக ஜோஹோ நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி, பத்மஶ்ரீ ஶ்ரீதர் வேம்பு கலந்து கொண்டு "கொற்றவை" தளத்தை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார். கொற்றவை இணை நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி கொற்றவை தளத்தில் அடுத்தடுத்த திட்டங்கள், வளர்ச்சிகள் குறித்துப் பேசினார். அவர் பேசுகையில், தென்காசி மாவட்ட பெண்கள் வர்த்தகத்தில் உலக அளவில் ஜொலிக்க கொற்றவை தளம் வழிகாட்டும், என்றார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இல்லத் தரசிகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.