தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 2) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்டத்திற்கு உட்பட்ட மேலப்பாளையம், டவுன், பேட்டை, ஜங்ஷன், கோட்டூர், தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் ஆரம்பம் மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கட்சியினர் இனிப்பு மற்றும் எழுதுகோல் வழங்கி வரவேற்றனர்.