ஓசூர்:கராத்தே தற்காப்பு கலை தேர்வில் பெல்ட் கிரேடிங் மற்றும் சான்றிதழ் வழங்கிய மாமன்ற உறுப்பினர்

ஓசூர்: கராத்தே தற்காப்பு கலை தேர்வில் பெல்ட் கிரேடிங் மற்றும் சான்றிதழ் வழங்கிய மாமன்ற உறுப்பினர்;

Update: 2025-06-02 06:31 GMT
கிருஷ்ணகிரி ஓசூர் அரசு மாநகராட்சி துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கராத்தே தற்காப்பு கலை தேர்வில், பெல்ட் கிரேடிங் மற்றும் சான்றிதழ் வழங்கிய மாநகராட்சி மாமன்றஉறுப்பினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜுஜுவாடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு துவக்கப் பள்ளியில் தென் மாநிலங்களுக்கு இடையேயான கராத்தே பயிற்சி தேர்வுகள் நடைபெற்றன. இதில் நடைபெற்றகராத்தே பெல்ட் கிரேடிங் தேர்வில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்தும் மாணவ மாணவிகள் வந்திருந்து அவர்களது கராத்தே பெல்ட் கிரேடிங் தேர்வில் பங்கேற்று அசத்தினார்கள். இதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 50 பேருக்கு. ஒசூர் மாநகராட்சியின் முதல் வார்டு மாமன்றஉறுப்பினர் அசோகா ரெட்டி, சான்றிதழ் உடன் பெல்ட்டுகள் வழங்கி கவுரவித்தார்.

Similar News