பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு பரிசு
சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி;
சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 455 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர் கேர்வெல் ராபர்ட்டை தலைமை ஆசிரியர் முனைவர் பெருமாள் இன்று காலை பாராட்டி பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவி செல்வமணி, துணைத்தலைவி மாரியம்மன், கல்வியாளர் டேனியல் ஆசிர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சாந்தி, டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.