சாதனை மாணவனுக்கு முன்னாள் மாணவர்கள் நேரில் பாராட்டு
பேட்டை காமராஜ் அரசு மேல்நிலைப்பள்ளி;
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மன்ற செயல்பாடுகள் மாவட்ட அளவிலான போட்டியில் பேட்டை காமராஜ் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் இசக்கி ராஜ் பங்கேற்று சிறார் குறும்படம் தயாரித்தல் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். இந்த மாணவனை நேற்று (ஜூன் 1) காமராஜ் பள்ளி முன்னாள் மாணவர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி மேலும் சாதனை படைக்க வாழ்த்து தெரிவித்தனர்.