சங்கரன்கோவிலில் பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகை

பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகை;

Update: 2025-06-02 13:49 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நேதாஜி நகரில் அமைந்துள்ளது. இந்த நகரில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வாருகால் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அந்தப் பகுதி தெருக்களில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனவும், அந்தப் பகுதியில் தெருவிளக்கு எரியவில்லை என உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் யூனியன் அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் முற்றுகை விட்டனர். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News