டூவீலர் மீது கார் மோதியதில் மனைவி பலி, கணவர் படுகாயம், கார் ஓட்டுனர் தலைமறைவு

குமாரபாளையம் அருகே டூவீலர் மீது கார் மோதியதில் மனைவி பலி, கணவர் படுகாயம், கார் ஓட்டுனர் தலைமறைவானார்.;

Update: 2025-06-02 14:44 GMT
பள்ளிபாளையம் அருகே மலைக்காடு பகுதியில் வசிப்பவர்கள் ராஜேந்திரன், 58, ஜெயலட்சுமி, 54. விசைத்தறி கூலி தொழிலாளிகள். ராஜேந்திரன், தன் மனைவியுடன் தனது ஹீரோ ஹோண்டா ஸ்பெலன்டர் வாகனத்தில், நேற்றுமுன்தினம் மாலை 06:45 மணியளவில், குமாரபாளையம், கோட்டைமேடு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த, சுசுகி பிரான்ஸ் என்ற காரின் ஓட்டுனர், இவர் வந்த டூவீலர் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்று விட்டார். இதில் தம்பதியர் இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் இருவரையும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஜெயலட்சுமியை, மேல் சிகிச்சைக்காக, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 07:15 மணியளவில் ஜெயலட்சுமி இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Similar News