சாமானியர்கள் பயன்படுத்திய ரயில் போக்குவரத்து தற்பொழுது பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தும் போக்குவரத்தாக மாறிவிட்டதாகவும் விருதுநகரில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட
சாமானியர்கள் பயன்படுத்திய ரயில் போக்குவரத்து தற்பொழுது பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தும் போக்குவரத்தாக மாறிவிட்டதாகவும் விருதுநகரில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி...*;
தென் மாவட்டங்களில் இயக்கப்படும் பல ரயில்கள் பொதுப் பெட்டிகளில் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருப்பது கவலைக்குரிய விஷயம் எனவும் இந்தியா முழுவதும் இதுபோன்று பொதுப்பட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாகவும் சாமானியர்கள் பயன்படுத்திய ரயில் போக்குவரத்து தற்பொழுது பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தும் போக்குவரத்தாக மாறிவிட்டதாகவும் விருதுநகரில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி... விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறைக்கு பின்பு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டிற்கான புத்தகங்கள் மற்றும் புதிய கல்வி ஆண்டில் மாணவிகள் சிறப்பாக படிப்பதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் .அதை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசுகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் வழக்கு விரைவாக முடிக்கப்பட்டு இருப்பதற்கு நீதித்துறைக்கும் விரைவாக நடத்திய சட்டத்துறைக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும், இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இதே போன்று கடுமையான தண்டனைகளை விதித்து பெண்களுடைய பாதுகாப்பிற்கு சட்டத்துறை எடுத்துக்காட்டாக விளங்குவாதக தெரிவித்தார். அதை தொடர்ந்து பேசிய அவர் டெல்லியில் யமுனை ஆற்றங்கரை பகுதியில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருவதாகவும் அந்த பகுதியில் உள்ள வீடுகளை பாஜக அரசு அமைந்த உடன் அவசர அவசரமாக இடித்து வருவதாகவும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்த காலத்தில் கூட அந்த பகுதியில் உள்ள வீடுகள் இடிக்கப்படாமல் இருந்ததாகவும் இது வருந்தக்கூடிய ஒன்று எனவும் இதற்காக பாஜக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்று இருக்க வேண்டும் எனவும் மேலும் டெல்லி பாஜக அரசு தமிழக மக்கள் மீது எந்தவித அக்கறையையும் கொள்ளவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் பாஜக எப்பொழுதும் தமிழக மக்களின் விரோத அரசுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக கூறினார் மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு லாரி லாரி ஆக பணத்தை கொட்டுவார்கள் என விஜய் கூறிய கருத்துக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விஜய் பேசுவது புதிய கட்சி தொடங்குபவர்கள் காலம் காலமாக பேசுவது தான் இதை விஷயத்தை எதிர்க்கட்சியாக இருப்பவர்களும் சொல்வதுதான் தமிழக மக்கள் சாதாரணமானவர்கள் இல்லை என்றும் பணத்திற்காக விலை போவார்கள் என்பதைப் போல் விஜய் பேசியிருப்பது நியாயமானதாக இருக்காது தமிழக மக்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் கடந்த எடப்பாடி ஆட்சிக்காலத்தில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் ஆனால் மக்கள் அதற்கு எதிராக வாக்களித்ததாகவும் மக்களின் எண்ணம் செயல்பாட்டில் தான் உள்ளது என்றும் பணத்திற்காக இல்லை எனவும் பதிலளித்தார் இளைய தலைமுறை வாக்குகள் விஜய்க்கு இருப்பதாக சர்வைகள் கூறுவது குறித்து பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் மிகத் தெளிவாக இருப்பதாகவும் அவர்களை பொறுத்தவரையில் வாக்கு செலுத்துவதற்கு முன்பு மக்கள் சொல்லும் கருத்துக்கணிப்பும் வாக்கு செலுத்திய பின்பு வரும் கருத்துக்கணிப்பிற்கும் தேர்தல் முடிவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் சர்வே முடிவுகள் அறிவியல் பூர்வமாக எப்படி பொருந்தும் என்பது தெரியவில்லை என பதில் அளித்தார் டிரம்ப் கூறிதான் சிந்துர் போர் நிறுத்தப்பட்டதாக டிரம்ப் பலமுறை கூறிவிட்டார் இதற்கு பதில் அளிக்க பாஜக வைச் சார்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் பிரதமர் மோடியோ ஏன் வாயை திறக்கவில்லை என கேள்வி எழுப்பினார் தென் மாவட்டங்களில் இயக்கப்படும் பல ரயில்கள் பொதுப் பெட்டிகளில் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருப்பது கவலைக்குரிய விஷயம் எனவும் இந்தியா முழுவதும் இதுபோன்று பொதுப்பட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாகவும் சாமானியர்கள் பயன்படுத்திய ரயில் போக்குவரத்து தற்பொழுது பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தும் போக்குவரத்தாக மாறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். இது குறித்து தனிப்பட்ட முறையில் ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து குரல் கொடுக்க இருப்பதாகவும் பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் இது குறித்து குரல் கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார். பேட்டி: மாணிக்கம் தாகூர் - பாராளுமன்ற உறுப்பினர் ( விருதுநகர்)