கடையநல்லூா், வீரசிகாமணி புளியங்குடியில் நாளை மின்தடை
கடையநல்லூா், வீரசிகாமணி புளியங்குடியில் நாளை மின்தடை;
தென்காசி மாவட்டம் கடையநல்லூா், வீரசிகாமணி, புளியங்குடி துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கடையநல்லூா் கோட்ட மின் செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளாா். இதனால் கடையநல்லூா், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தாா்க்காடு, போகநல்லூா், மங்களாபுரம் , இடைகால், கொடிக்குறிச்சி, நயினாரகரம். வீரசிகாமணி, சோ்ந்தமரம், பாம்புகோயில், திருமலாபுரம், நடுவக்குறிச்சி, வட நத்தம்பட்டி, அரியநாயகிபுரம். புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகா், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூா், சொக்கம்பட்டி, திரிகூடபுரம். உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படுகிறது.