கலைஞருக்கு மரியாதை செலுத்திய தமிழ் அமைப்புகள்
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102வது பிறந்த நாள்;
நெல்லை மாநகர கூலக்கடை வீதி திருவள்ளுவர் பேரவை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஜூன் 3) தமிழ் அமைப்புகள் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவர் பேரவை சார்பில் கவிஞர் ஜெயபாலன், தமிழ் நலக்கழகம் சார்பில் கவிஞர் பாப்பாகுடி இரா.செல்வமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.