கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்த எம் எல் ஏ.
மதுரையில் சிம்மக்கல்லில் உள்ள கலைஞர் சிலைக்கு திமுக மாவட்ட செயலாளர் தளபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;
டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி அவர்கள் சிம்மக்கல்லில் உள்ள கலைஞரின் திருவுருவச்சிலைக்கு இன்று (ஜூன் 3)மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் செம்மொழி நாளை முன்னிட்டு 1000 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.