திருக்குவளை தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி பெருவிழா

வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், விநாயகர், தியாகராஜ சுவாமி ஆகிய பஞ்ச மூர்த்திகள் பூத வாகனத்தில் எழுந்தருள வீதியுலா;

Update: 2025-06-03 09:55 GMT
நாகை மாவட்டம் திருக்குவளையில், தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்றான இக்கோயிலில், தருமபுர ஆதீனத்தின் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி அருளாசியுடன், வைகாசி பெருவிழா கடந்த மே மாதம் 23 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்வேறு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூத வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா புறப்பாடு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. சிவ வாத்தியங்கள் முழங்க சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ தியாகராஜ சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து, வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், விநாயகர், தியாகராஜ சுவாமி ஆகிய பஞ்ச மூர்த்திகள் பூத வாகனத்தில் எழுந்தருள வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. பின்னர், சிறப்பு மகா தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News