சூறாவளி காற்றால் வீட்டின் மேற்கூரை சேதம்: திமுக சார்பில் நிவாரண

தென்காசி அருகே திமுக சார்பில் நிவாரண;

Update: 2025-06-03 12:58 GMT
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் சூறாவளி காற்றால் வீட்டின் மேற்கூரை சேதமடைந்தவ ருக்கு திமுக சார்பில் உணவு பொருட்களை முன் னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார். ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கடையம் தெற்கு ஒன்றியம், மந்தியூர் ஊராட்சி வாகைகுளம் பகுதியில் சமீபத்தில் பெய்த மழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக பாண்டித்துரை என்பவரின் வீட்டின் மேற் கூரை ஆஸ்பெஸ்டாஸ் சீட் முழுவதும் சேதமாகி விட்டது. இது பற்றி தகவல் அறிந்த முன்னாள் தென் காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அந்த வீட்டின் மேற்கூரை அமைக்க ஏற்பாடு செய்து கொடுத்ததுடன், தற்காலிக மாக திருமண மண்டபத் தில் தங்க வைக்கப் பட்டுள்ள பாண்டித்துரை குடும்பத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள், மஞ் சள், மசாலா உள்ளிட்ட உணவு பொருட்களையும் சிவபத்மநாதன் வழங் கினார். இந்நிகழ்வில் கடையம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News