வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்.

மதுரை உசிலம்பட்டியில் வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2025-06-03 14:54 GMT
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 8- வது வார்டு சிவன் காளை கோவில் தெருவில் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து பட்டாசு விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், உசிலம்பட்டி டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையிலான போலீஸார், சிவன்காளைத் தேவர் தெருவில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில், பாண்டீஸ்வரி என்பவரது வீட்டில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்த போலீசார் சுமார் 8 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பாண்டீஸ்வரியிடம் நடத்திய விசாரணையில், பெட்டிக் கடை வைத்து நடத்தி வருவதாகவும், சட்டவிரோதமான விற்பனை செய்து வந்தாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் குடியிருப்புகள் அதிகம் உள்ள இந்த வீட்டில் அசம்பாவிதம் ஏதும் நடந்திருந்தால், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என பொதுமக்கள் அச்சத்தில் பீதியடைந்துள்ளனர்.

Similar News