சாட்சியை நீதிமன்ற வளாகம் முன்பு நிறுத்திய குற்றவாளியை போலீஸ் விசாரணை
குமாரபாளையம் நீதிமன்ற வளாகத்தில் சாட்சியை மிரட்டிய குற்றவாளி;
குமாரபாளையம் நீதிமன்ற வளாகத்தில் வெப்படை போலீஸ் ஸ்டேஷன் சார்பில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. 2022ம் ஆண்டில், படவீடு பகுதியை சேர்ந்த, கட்டிட கூலி தொழிலாளி, விக்னேஸ்வரன், 26, என்பவரை கவின்குமார், 24, அரவிந்தராஜ், 27, ஹரிதாஸ், 27, ஆகிய மூவரும் அடித்து பணம் பறித்ததாக வழக்கு தொடரப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனர். ஹரிதாஸ் தவிர மற்ற இருவரும், ஜாமீனில் வெளி வந்தனர். கிளைச் சிறையில் இருந்த, ஹரிதாஸ் என்பவரை, வெப்படை போலீசார் நேற்று, குமாரபாளையம் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது, அங்கு வழக்கு விசாரணைக்கு வந்த ஹரிதாஸ், விக்னேஸ்வரனை பார்த்து, கோழி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், நீதிபதி வாசஸ்,ம் விக்னேஸ்வரன், புகார் தெரிவிக்க, குமாரபாளையம் போலீசாரை வரவழைத்து, ஹரிதாஸ் என்பவரை விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். குமாரபாளையம் போலீஸ் இது பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.