கடலூர்: வேப்பூரில் அதிகபட்ச மழை பதிவு
கடலூர் மாவட்டத்தில் வேப்பூரில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.;
கடலூர் மாவட்டம், வேப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று அப்பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதையடுத்து இன்று (03.06.2025) காலை 8.30 மணி நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வேப்பூரில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.