மின்மாற்றி பழுது: விவசாயிகள் அவதி

மின்மாற்றி பழுது காரணமாக வியாழன்மேடு மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.;

Update: 2025-06-03 19:29 GMT
திருச்சி மாவட்டம், வியாழன்மேடு, கீழப்பட்டி, போசம்பட்டி, புலியூா், குழுமணி, கோப்பு, நெய்தலூா் காலனி, போதாவூா், தாயனூா், பள்ளக்காடு மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களுக்கு மின்சாரம் அளிக்கும் போசம்பட்டி, வியாழன்மேடு ஆகிய பகுதிகளில் உள்ள இரு மின்மாற்றிகள் அண்மையில் பழுதடைந்தன. இதையடுத்து சுற்றுப் பகுதி கிராமங்களில் 800-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் மற்றும் மலா் செடிகளுக்குத் தண்ணீா் பாய்ச்சுவதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டது. இதுதொடா்பாக மின்வாரியத்தினரிடம் விவசாயிகள் பலமுறை முறையிட்டும் பயனில்லையாம். இதையடுத்து தமாகா விவசாய அணி நிா்வாகிகள் ராஜேந்திரன், செல்வம் உள்ளிட்டோா் திருச்சி தென்னூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், தலைமைப் பொறியாளரைச் சந்தித்து முறையிட்டதையடுத்து, போசம்பட்டி மின்மாற்றியைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் வியாழன்மேடு பகுதி மின்மாற்றியைச் சீரமைக்கவில்லை. இதனால், வியாழன்மேடு பகுதி விவசாயிகளுக்கு தண்ணீா் பாய்ச்சுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மின்மாற்றியையும் விரைந்து சீரமைக்க தமாகா விவசாய அணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News