திருவேங்கடத்தில் கலைஞர் பிறந்தநாள் விழாவை திமுகவினர் கொண்டாட்டம்

கலைஞர் பிறந்தநாள் விழாவை திமுகவினர் கொண்டாட்டம்;

Update: 2025-06-04 00:26 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் காந்தி மண்டபம் முன்பு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கலைஞர் திருவுருவப்படத்திற்கு குருவிகுளம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சேர்மதுரை மற்றும் பேரூர் கழகச் செயலாளர் மாரிமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்பு அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி மகேஸ்வரன், திருவேங்கடம் பேரூர் கவுன்சிலர் கணேசன், கிளைச் செயலாளர் கோபி, விவசாய அணி செயலாளர் கலைச்செல்வம், திருவேங்கடம் பேரூர் கழக நிர்வாகிகள் மாரிமுத்து, செல்வகுமார், தாமோதரை கண்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News