கிருஷ்ணகிரி: லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா

கிருஷ்ணகிரி:லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா;

Update: 2025-06-04 00:32 GMT
கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் 39-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதை ஒட்டி காலை சிறப்பு யாகம் நடந்தது. காலை 9 மணிக்கு மேல், மந்திரங்கள் முழங்க கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் அலங்கரிக்கப்பட்ட திருவிழா கொடியை அர்ச்சகர்கள் ஏற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய் தனர். தொடர்ந்து. அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்ம சாமி உற்சவரை கோவிலைச்சுற்றி ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

Similar News