பண்ணந்தூரில் பல்வேறு சமூக மக்களிடையே நிலவிவந்த பிரச்னை தீா்வு.

பண்ணந்தூரில் பல்வேறு சமூக மக்களிடையே நிலவிவந்த பிரச்னை தீா்வு.;

Update: 2025-06-04 02:28 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம்போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூா் கிராமத்தில் பல்வேறு சமூகத்தினா் வசித்து வருகின்றனா். இத் நிலையில் ஒரு சமூகத்தை சோ்ந்தவா்களுக்கும் மற்றவா்களுக்கு இடையே 13 ஆண்டுகளாக கருத்துவேறுபாடு இருந்து வந்தது. கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ஷாஜகான் தலைமையில் நேற்று பண்ணந்தூா் கிராம மக்கள் பங்கேற்ற சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்ததை நடத்தியதில் 13 தீா்மானங்களுக்கு இருதரப்பினர் சம்மதம் தெரிவித்தனர், இதை அடுத்து அலுவலா்கள் முன்னிலையில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.

Similar News