பள்ளியில் குடிநீர் வசதியில்லை என குற்றச்சாட்டு

அரசுப் பள்ளியில் குடிநீர் வசதியில்லை என குற்றச்சாட்டு... குடிநீர் இல்லாததால் மதிய உணவு தயாராகவில்லை;

Update: 2025-06-04 03:01 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குடிநீர் இல்லாத காரணத்தால், மதிய உணவு தயார் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ- மாணவிகள், மதிய உணவுக்காக வீடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மன்னவனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை என புகார் கூறப்படுகிறது.

Similar News