அன்னூர் அங்கன்வாடி மையத்தைச் சுற்றிய புதர்களை அகற்றிய பொதுமக்கள் !
அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டர்பாளையம் ஊராட்சி, 3-வது வார்டு புதுகாலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தைச் சுற்றியிருந்த முட்புதர்களை அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அகற்றினர்.;
அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டர்பாளையம் ஊராட்சி, 3-வது வார்டு புதுகாலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தைச் சுற்றியிருந்த முட்புதர்களை அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அகற்றினர். கோடை விடுமுறைக்குப் பிறகு அங்கன்வாடி மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், கட்டிடத்தைச் சுற்றி மழை காரணமாக முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், அவர்களே மண்வெட்டி, கடப்பாறை போன்ற கருவிகளைப் பயன்படுத்தி புதர்களை அகற்றினர். போதுமான தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.