வீட்டு விளையாடிய சிறுமி மர்மமான முறையில் சாவு
தூத்துக்குடி அருகே வீட்டு விளையாடிய சிறுமி மர்மமான முறையில் சாவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்துக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் அருண், செய்யது சபீனா தம்பதிகளின் இரண்டரை வயது குழந்தை சாரா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழப்பு: பெற்றோர்கள் கதறி அழுதது பார்ப்போர்களை நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது! தாளமுத்து நகர் காவல்துறையினர் விசாரணை தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளை யூரனி பஞ்சாயத்துக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் செய்யது சபீனா இருவரும் காதலித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஷாஜினி சாரா என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் அருண்குமார் வேலைக்கு சென்று விட வீட்டில் தாய் செய்யது சபீனா மற்றும் இரண்டரை வயது குழந்தை இருந்துள்ளனர் செய்யது சபீனா வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அடுத்த அறையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் அழறல் சத்தம் கேட்டு தாய் செய்யது சபீனா ஓடி வந்து பார்த்தபோது குழந்தை மயங்கிய நிலையில் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆட்டோ மூலம் மாப்பிள்ளை ஒரு அடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்துள்ளனர் இது தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தை ஷாஜினி சாராவை கொண்டு வந்துள்ளனர் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து தாளமுத்து நகர் காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.