அரியலூரில் பல தலைமுறைகளாக வாழும் ஏழை, எளிய மக்களின் வீடுகளை இடிப்பதா? மாவட்ட நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு கண்டனம்*
அரியலூரில் பல தலைமுறைகளாக வாழும் ஏழை, எளிய மக்களின் வீடுகளை இடிப்பதா? மாவட்ட நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு சார்பில் மாவட்ட செயலாளர் எம். இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.;
அரியலூர், ஜூன்.5- அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீர்நிலை புறம்போக்கு எனக் காரணம் காட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையினர் மாவட்ட காவல் துறை உதவியுடன் ஏழை, எளிய மக்களின் வீடுகளை இடிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் மாவட்ட குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அரியலூர் மாவட்டம் அரியலூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகமங்கலம் காமராஜர் நகர் காஞ்சிலி கொட்டாய் பகுதி. ஜெயங்கொண்டம், சலுப்பை ஊராட்சிக்குட்பட்ட பட்டவர்த்தி கிராமம் போன்ற பகுதிகளில் நீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டி 3 முதல் 6 தலைமுறைகளாக 150 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கையில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு சிபிஎம் கட்சி சார்பில் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறோம். ஊரக வளர்ச்சி துறையினரின் அத்துமீறலை கண்டித்து கடந்த 3ம் தேதி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாபெரும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்று அதனை தொடர்ந்து அன்றே மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பரிமளத்தை சந்தித்து புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட நாகமங்கலம் காமராஜர் நகர் காஞ்சிலி கொட்டாய், பட்டவர்த்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் உள்ளிட்ட குழுவினர் நேரடியாக சென்று சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். அப்போது நாகமங்கலம் காமராஜர் நகர் காஞ்சிலி கொட்டாய் பகுதியில் வீட்டு உரிமையாளர்கள் இல்லாத நேரத்தில் 2 வீடுகளை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையினர் காவல்துறை பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.ஆளில்லாத வீட்டில் பொருட்களை கூட எடுக்க முடியாமல் குடும்பத்தினர் செய்வதறியாது கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது...இது பெரும் கண்டனத்துக்குரியதாகும் -அதேபோல் நாகமங்கலம் காமராஜர் நகர் காஞ்சிலி கொட்டாய் பகுதியில் வாழும் மக்களுக்கு குடிநீர் வசதிக்காக அருகில் உள்ள ஏரியை தூர்வாரி நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும்,.மேலும் அப்பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும், மேலும் அப்பகுதியில் சிதலமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையை சீர் செய்து தார் சாலையாக மாற்றி தர வேண்டும் எனவும், தொடர்ந்து ஏழைகளின் வீடுகளை இடிப்பதை அனுமதிக்க முடியாது என்ற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என்று மாவட்ட குழு சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.. :-