தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேலாண்மை இயக்குநர் ஆய்வு
ஆய்வு;
தஞ்சாவூர் மாவட்டம், அரண்மனை வளாக சரஸ்வதி மகால் நூலகத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேலாண்மை இயக்குநர் முனைவர் பொ.சங்கர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சரஸ்வதி மகால் நுாலக இயக்குநர் பா.பிரியங்கா பங்கஜம் முன்னிலையில், செவ்வாய்க்கிழமையன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேலாண்மை இயக்குநர் முனைவர் பொ.சங்கர் சரஸ்வதி மகால் நூலகத்தினை பார்வையிட்டு, நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் குறித்தும் மற்றும் பதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். அச்சகத்தின் மூலம் புத்தகங்கள் அச்சிடும் பணி நடைபெற்று வருவதையும், ஓலைச்சுவடிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளதையும், ஓலைச்சுவடிகள் பராமரிக்கப்பட்டு வருவதனையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, சரஸ்வதி மகால் நூலகத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நூலகத்தில் வாசகர் பிரிவு, அருங்காட்சியகம், விற்பனை பிரிவு, சரஸ்வதி மகால் நூலக ஒளி, ஒலி காட்சியகம் போன்ற பல்வேறு நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேலாண்மை இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, சரஸ்வதி மகால் நூலக நிர்வாக அலுவலர் எஸ்.மார்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.