ஊத்தங்கரை: பட்டாளம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா.
ஊத்தங்கரை: பட்டாளம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள பட்டக்கானூர் சரட்டூர்ரில் உள்ள பட்டாளம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இன்று காலை கணபதி ஹோமம், சண்டி ஹோமம் நடந்தது. தொடர்ந்து பூஜிக்கபட்ட கலசங்களை ஊர்வலமாக எடுத்து சென்று பட்டாளம்மன் கோபுர கலசங்களுக்கு ஆச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.