மூலனூர் பகுதிகளில் கருணாநிதி பிறந்தநாள் விழா

மூலனூர் பகுதிகளில் கருணாநிதி பிறந்தநாள் விழா மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது;

Update: 2025-06-05 01:52 GMT
மூலனூர் பேரூர் கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி பல் வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாச்சிபாளையம் புதுக்கோட்டை கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ - மாணவிகளுக்கு காலை உணவும், அப்பள்ளியின் சத்துணவுக் கூடங்களுக்கு எரி வாயு அடுப்புகள் ஆகியவற்றை மூலனூர் பேரூராட்சி தலைவர், தி.மு.க. பேரூர் கழகச் செயலாளர் மக்கள் தண்டபாணி வழங்கினார். மேலும் மூலனூர் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் பேரூராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி, அவைத்தலைவர் விஸ்வ நாதன், தொழிலாளர் அணி அமைப்பாளர் மனோகரன், வார்டு செயலாளர்கள் அண்ணாநகர் பாலு, முருகேசன், அர்ஜுன் சாமி, தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மூலனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி சார்பில் பொன்னிவாடி ஊராட்சியில் நடந்த விழாவில் கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, இளைஞரணி அமைப்பாளர் மகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News