அரசு மருத்துவமனை செயல்பாட்டை கண்டித்து காத்திரு போராட்டம்
குத்தாலம் அரசு மருத்துவமனையில் இரண்டு தற்காலிக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சிஐடியுவினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்;
. குத்தாலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த சுகந்தி, ரெஜினா ஆகிய 2 தூய்மை பணியாளர்களை காரணம் இன்றி பணிநீக்கம் செய்ததை கண்டித்து சிஐடியுவினர் குத்தாலம் அரசுமருத்துவமனை முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த கொரோனா பெருந்தொற்று காலம் தொட்டு பணியாற்றி வந்த இரண்டு பெண் தொழிலாளர்களை கடந்த மூன்றாவது மாதம் முதல் எந்தவித காரணம் இன்றி மருத்துவமனை நிர்வாகம் நீக்கிவிட்டு புது நபர்களை சேர்த்துள்ளது, மருத்துவரின் சொந்தப் பணியை செய்ய மறுத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்களை பணியில் சேர்த்துக் கொள்ளாததால் இந்திய தொழிற்சங்க மையத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக இன்று குத்தாலம் அரசு மருத்துவமனை முன்பாக சிஐடியு மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமையில் சிஐட்டியுனர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் காத்திருப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குத்தாலம் காவல்துறை உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். நேற்று இரவு ஒன்பது மணியளவில் மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி நடத்திய பேச்சு வார்த்தையில் ஒரு வாரத்திற்கு காத்திருப்புப்போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.