நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக கருத்து பதிவு செய்த நபர் கைது

திண்டுக்கல்லில் சமூக வலைதளங்களில் நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக கருத்து பதிவு செய்த நபர் கைது;

Update: 2025-06-05 03:58 GMT
திண்டுக்கல், நரிப்பாறை பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் ஸ்டாலின்(38) இவர் சமூக வலைதளங்களில் நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக கருத்து பதிவு செய்தார் இது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர்கள் சித்திக், பிரபாகரன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு ஸ்டாலினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஸ்டாலின் குடி போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News