நாகை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில்
சிசிடிவி, செல்போன் பழுதுநீக்கல் பயிற்சி - கிராமப்புற இளைஞர்களுக்கு அழைப்பு;
நாகை புதிய கடற்கரை சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுதுநீக்கம் செய்வது குறித்த 13 நாள் பயிற்சி, செல்போன் பழுதுபார்த்தல் 30 நாள் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர, 18 முதல் 45 வயதுடையவர்கள் தகுதியானவர்கள். நாகை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு,6374005365, 9047710810 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அறியலாம் என நாகை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு பத்திரிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.