அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கபோக்குவரத்திற்கு சைக்கிள்களை பயன்படுத்த விழிப்புணர்வு பேரணி.
அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கபோக்குவரத்திற்கு சைக்கிள்களை பயன்படுத்த விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.;
அரியலூர், ஜூன்.5- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பயணத்திற்கு பொது போக்குவரத்து மற்றும் சைக்கிள்களை பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.உலகம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது இதனை ஒட்டி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கிய சைக்கிள் பேரணியை கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் இதனையடுத்து செந்துறை சாலை கல்லூரி சாலை வழியாக சென்ற சைக்கிள் பேரணி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நிறைவடைந்தது சைக்கிள் பேரணியில் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்ப்போம் என விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு சென்றனர் இப்பேரணியில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முன்னதாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பயணத்திற்கு தனி வாகனத்தை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்து மற்றும் சைக்கிள்களை பயன்படுத்துவோம் வாகன பயன்பாட்டை முடிந்த அளவிற்கு குறைத்து கொள்வோம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்களை வளர்ப்போம் என மருத்துவர்கள் மருத்துவ கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்