பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது
வடமதுரை அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது, பெண்கள் உட்பட 4 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு;
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலுார் அருகே கோடாங்கிசின்னான்பட்டியில் நடந்த ஊர் திருவிழாவிற்காக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி உறவினர் வீட்டிற்கு வந்திருந்த போது ராஜபாண்டி(35) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று பிரேமலதா, விஜயகுமார், காயத்ரி, சிங்கராஜ் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனர் இந்நிலையில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சிறுமியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் ராஜபாண்டியை கைது செய்தனர் மேலும் மற்ற நால்வர் மீதும் கொலை மிரட்டல் வழக்கின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.