கிருஷ்ணகிரி ஆட்சியருக்கு பசுமை விருது. முதல்வர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி ஆட்சியருக்கு பசுமை விருது. முதல்வர் வழங்கினார்.;

Update: 2025-06-05 10:12 GMT
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று 5.6.2025 சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சி. தினேஷ் குமார், இ.ஆ.ப., அவர்களுக்கு பசுமை விருது வழங்கினார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னாசு, மாண்புமிகு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மாண்புமிகு வனத்துறை மற்றும் காதி அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் ஆ.ர. ராகுல் நாத் இ.ஆ.ப, முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் திரு. ஸ்ரீனிவாஸ் ரெட்டி, இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா, இ.வ.ப., தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் முனைவர் எம். ஜெயந்தி, இ.வ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News