வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

பரமத்திவேலூர் வட்டாரத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.;

Update: 2025-06-05 14:02 GMT
பரமத்திவேலூர்,ஜூன்.5:   பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சி 3-வது வார்டு ஓவியம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடத்தை ஆட்சியர்  உமா பார்வையிட்டார். அங்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பாவடி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குடிநீர், மின்வசதி,கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பார்வையிட்டும்,அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு,பொருட்களின் இருப்பு, குழந்தைகளின் வருகை,உயரம், எடை உள்ளிட்டவைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன் வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பரமத்தி பேரூராட்சி கடைவீதி கடை பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றை பார்வையிட் டார். பின்னர் அந்த கிணறுக்கு சுற்றுச்சுவர் அமைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அங்குள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் தரம்,விற்பனை விவரம்,பொருட்களின் காலாவதி காலம்,குளிர்பானங்கள் தரம் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.    அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு பணியாளர்களின் வருகை பதிவேடு, கோப்புகளின் விவரம் மற்றும் பொது வழங்கப்படும் சேவைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்  உமா ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது  பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோகன், மகாலட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Similar News