பர்கூரில் முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை பிறந்தநாள் விழா

பர்கூரில் முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை பிறந்தநாள் விழா;

Update: 2025-06-05 15:08 GMT
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தலைவர் கவியரசு ஆலோசனைபடி தமிழக முன்னாள் மாநில தலைவர் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான கே. அண்ணாமலை பிறந்தநாள் விழா பர்கூர் பேருந்து பேருந்து நிலையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை பர்கூர் மண்டல பொறுப்பாளர் சி.மயில்வேலன் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி அங்குள்ள பொது மக்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம், மாவட்ட பொது செயலாளர்கள் ஆர். முருகேசன், எம்.ஆர்.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் கே.கோவிந்தராஜ், ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News