வெளி மாநில லாட்டரி விற்ற வழக்கில் இருவர் கைது
குமாரபாளையத்தில் வெளி மாநில லாட்டரி விற்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.;
குமாரபாளையத்தில் வெளி மாநில லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. பிரபாகரன் ஆகியோர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். கத்தேரி பிரிவு சாலை பகுதியில் லாட்டரி விற்பது தெரியவந்தது. நேற்றுமுன்தினம் காலை 09:30 மணியளவில் நேரில் சென்ற போலீசார், லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் ஞானசம்பத், 42, இளங்கோவன், 58, ஆகியோரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.