கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை, தமிழ் மரபு கழக தலைவர் தகவல்
கமலஹாசன் பேசியது தவறு இல்லை, மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை, என குமாரபாளையம் தமிழ் மரபு கழக தலைவர் மதிவாணன் கூறினார்.;
குமாரபாளையத்தை சேர்ந்த தமிழ் மரபு கழக தலைவர் மதிவாணன், கமலஹாசன் பற்றி கூறியதாவது: பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, கடலால் சூழப்பட்ட ஆஸ்திரேலியா உள்ளிட்ட, தென் ஆப்ரிக்கா ஒன்று சேர்ந்த மேமொரியா கண்டத்தின் மொழி, தமிழ் மொழிதான். முருகன் தோற்றுவித்த மொழி தமிழ் மொழி. முருகனின் குரு, திருமூலர், மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்று சொல்வார்கள். முருகனிடம் கற்றுகொண்ட தமிழ் மொழி மூலம் தான் திருமூலர், திருமந்திரம் எழுதினார் என்று சொல்வார்கள். தமிழ் மொழியின் சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லுடா, என்று பாரதிதாசன் கூறினார். அது போல் கமலஹாசன் தலை நிமிர்ந்து நிற்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். நீதிமன்றத்தில், கமல் பேசியது தவறு என்று நீதிபதி பேசவில்லை. பின் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? பல கோடி ரூபாய் போனலும் பரவாயில்லை, மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கமல் சொன்னதிற்கு பாராட்ட வேண்டும். கமல் சொன்னதை தேவநாத பாவனார் உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்கள் ஆதாரம் கொடுத்துள்ளனர். வள்ளலார் கூட தமிழ் மொழி தான், முதன்மையான ,மொழி, தமிழ் மொழி பித்ரு மொழி என்று கூறியுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி, ஐக்கிய நாட்டு சபையில், உலகத்தில் முதல் மொழி தமிழ் மொழிதான் என்று பேசியுள்ளார். அதற்காக, பிரதமரை மன்னிப்பு கேட்க சொல்ல முடியுமா? இவ்வாறு அவர் கூறினார்.