பட்டுக்கோட்டை அருகே விவசாயத் தொழிலாளர் சங்கம் கிளை அமைப்புக் கூட்டம் 

விவசாயத் தொழிலாளர் சங்கம்;

Update: 2025-06-05 16:27 GMT
தஞ்சாவூர் மாவட்டம்,  பட்டுக்கோட்டை ஒன்றியம் ஏரிப்புறக்கரையில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை அமைப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.பிரதீப் ராஜ்குமார்,  பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் வி.தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலாளர், கே.பெஞ்சமின், விவசாயத் தொழிலாளர் சங்க அதம்பை பகுதி பொறுப்பாளர்  ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் அமைப்பு, செயல் திட்டம் குறித்து விளக்கிப் பேசினர்.  புதிய நிர்வாகிகள் கிளை அமைப்பு கூட்டத்தில் சுமார் 29 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், தலைவராக ஸ்ரீ லட்சுமி, துணைத் தலைவராக  எம்.மாரிக்கண்ணு, செயலாளராக சி.முத்துலட்சுமி, துணைச் செயலாளராக பாலுசாமி, பொருளாளராக  ஆர்.முருகேசன் ஆகியோர் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.  தீர்மானம்  ஏரிப்புறக்கரை அரசூதி நகர் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு, குடிமனைப் பட்டா தொடர்பாக, வருகிற 9 ஆம் தேதி கும்பகோணத்தில் நடக்கவிருக்கின்ற, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரையை சந்தித்து மனு கொடுப்பது, வருகின்ற ஜூலை 1ஆம் தேதி ஏரிப்புறக்கரையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கொடியேற்றுவது" என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Similar News