வழி தவறி வந்த மாணவனை பள்ளிபாளையம் போலீசில் ஒப்படைத்த குமாரபாளையம் போலீசார்

பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவர் வழிதவறி, குமாரபாளையம் அருகே உள்ள சுற்றித்திரிந்தவரை, குமாரபாளையம் போலீசார் பள்ளிபாளையம் போலீசாரிடம் ஒப்ப்டைத்தனர்.;

Update: 2025-06-05 16:43 GMT
பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு பயிலும் லிங்கேஸ்வரன் என்பவர், வழி தவறி குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையம் பகுதியில் சுற்றித்திரிந்தார். மாணவனை அப்பகுதியை சேர்ந்த பூங்கொடி என்பவர் குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்தார். அப்பொழுது மாணவனிடம் விசாரித்த இன்ஸ்பெக்டர் தவமணி, உடனடியாக பள்ளிபாளையம் போலீசாரிடம் தொடர்பு கொண்டார். அப்பொழுது மாணவனைக் காணவில்லை என, மாணவரின் பெற்றோர் வளர்மதியும் அர்த்தநாரிசாமி பள்ளிபாளையம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார், பள்ளிபாளையம் போலீசாரிடம் மாணவனை ஒப்படைத்தனர்.

Similar News