செல்போன் திருடிய தனியார் நிறுவன மேலாளர் கைது
ரயிலில் பணம், செல்போன் திருடிய தனியார் நிறுவன மேலாளரை கைது செய்த திண்டுக்கல் ரயில்வே போலீசார்;
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திண்டுக்கல் வரை பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சதீஸ்வரன் என்பவர் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார் ரயில் திண்டுக்கல் நிலையம் அருகே வந்தபோது அவரது பேக்கில் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.2000 பணத்தை ரயிலில் அதே பெட்டியில் பயணம் செய்த பெயிண்ட் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்த சரவணகுமார் என்பவர் திருடினார் இதுகுறித்த புகாரின் பேரில் ரயில்வே காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார் சரவணகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.