உலக சுற்று சூழல் தினவிழா ஓவியம், ரங்கோலி போட்டி
திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்று சூழல் தினவிழா ஓவியம், ரங்கோலி போட்டி;
திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘உலக சுற்றுச்சூழல் தின விழா’ மற்றும் ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி நடைபெற்ற கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, மரக்கன்று நடவு செய்தார். பள்ளியில் மாவட்ட அளவில் 28 பள்ளிகளைச் சார்ந்த 170 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, ஓவியம் வரைதல், ரங்கோலி மற்றும் பிளாஸ்டிக்கிற்கு மாற்று என்ற தலைப்பில் கண்காட்சி அமைத்திருந்தனர். விழாவில் பங்கேற்ற அனைவரும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக சுமார் 300 மஞ்சள் பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உஷா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.