நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி ஆய்வு
சிறப்பாக பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர், போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு;
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திருச்சி மண்டல ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் ஆய்வு செய்தார். பின்னர், வேதாரண்யம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் 100 கிலோ கஞ்சா, 121 கிலோ புகையிலைப் பொருட்களை கடத்த முயன்ற குற்றவாளிகளை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்த சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், காரைக்காவில் இருந்து சாராய பாட்டில்களை கடத்த முயன்ற 17 குற்றவாளிகளை கைது செய்த சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் உடனிருந்தார்.