கோவை: தேயிலைத்தூள் லாரி கவிழ்ந்து விபத்து !
வால்பாறை அருகே உள்ள ஒரு தனியார் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலையிலிருந்து கேரளாவிற்கு தேயிலைத்தூள் ஏற்றிச் சென்ற லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;
வால்பாறை அருகே உள்ள ஒரு தனியார் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலையிலிருந்து கேரளாவிற்கு தேயிலைத்தூள் ஏற்றிச் சென்ற லாரி நேற்று சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியை ஓட்டிச் சென்ற மெக்கானிக் வெள்ளியங்கிரி காயமின்றி உயிர் தப்பினார். லாரியில் திடீரென பழுது ஏற்பட்டதால், அதனை சரி செய்வதற்காக மெக்கானிக் வெள்ளியங்கிரி லாரியை வால்பாறை நகருக்கு ஓட்டி வந்தார். வால்பாறை ஸ்டேன்மோர் சாலையில் ஆத்துமட்டம் பகுதி அருகே வந்தபோது, அவரது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த வெள்ளியங்கிரிக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. லாரி சாலையோரத்தில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.