அம்பேத்கர் நகரில் தேங்கி நிற்கும் சாக்கடையால் துர்நாற்றம்
அம்பேத்கர் நகரில் சாக்கடை தேக்கத்தால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று அபாயம் உள்ளதால் உடனடியாக சாக்கடை தோட்டத்தை சீரமைத்து தடையின்றி சாக்கடை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.;
அரியலூர் ஜுன். 6- ஜெயங்கொண்டம் அம்பேத்கர் நகர் நாச்சியம்மன் கோவில் தெரு ஜுபி ரோடு பகுதியில் சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது இதனால் அவழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும் அவ்வழியாக செல்கின்ற பாதசாரிகள் துர்நாற்றத்தை தாக்கு பிடிக்காத நிலையில் மூக்கை பொத்தியவாறு செல்லும் சூழல் உள்ளதால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக தேங்கி நிற்கும் சாக்கடையை தேக்கமின்றி செல்ல சாக்கடை கால்வாயில் உள்ள அடைப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மென்மேலும் வழியாக பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அருகில் உள்ள முதியோர்களுக்கு விரைவில் ஓய்வு தொற்று பரவும் அபாயம் உள்ளதால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் இடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.