சமயபுரம் மாரியம்மன், கன்னிமூல கணபதி கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்
குமாரபாளையம் சமயபுரம் மாரியம்மன், கன்னிமூல கணபதி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.;
குமாரபாளையம், முருங்கைக்காடு, சமயபுரம் மாரியம்மன், கன்னிமூல கணபதி கோவில் கும்பாபிஷேக விழா, மே, 25ல், முகூர்த்தக்கால் அமைப்பது முதல் தொடங்கியது. நேற்று கணபதி யாகம் மற்றும் காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், அம்மன் சர்வ அலங்காரத்துடன் ஊர்வலமாக, அருள்பாலித்தவாறு வந்தார். இன்று முதல் நான்கு கால யாக சாலை பூஜைகள் தொடங்கவுள்ளன. ஜூன், 8ல், காலை 07:00 மணியளவில், மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக விழா மற்றும் யாக சாலை பூஜைகளை ஸ்ரீரங்கம் வரதராஜூ சுவாமி சிஷ்யர் ஞானமணி சர்மா குழுவினர் நடத்த உள்ளனர். இந்த விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள். கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.