உலக சுற்றுச்சூழல் தின விழா
குளித்தலை கிராமிய தொண்டு நிறுவன இயக்குனருக்கு சிறந்த நீர் நிலை பாதுகாவலர் விருது;
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜுன் - 5 ந்தேதி தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் - உலக சுற்றுச்சூழல் - 2025 விழா சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலும், கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹீ முன்னிலையில் சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த கிராமியம் தொண்டு நிறுவன தலைவர் முனைவர். நாராயணன் என்பவருக்கு தன்னிகரற்ற நீர் நிலை மேலாண்மை பணிகளுக்காக சிறந்த நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. மேலும் ஒரு லட்சம் ஊக்க தொகையும் வழங்கப்பட்டது குறித்து கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேலிடம் சமர்பித்து இன்று வாழ்த்து பெற்றார்.