உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவரை கள்ளக்காதல் விவகாரத்தில் ஜெயச்சந்திரன் என்பவர் 2021ஆம் ஆண்டு கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்த நிலையில், இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக, குற்றவாளி ஜெயச்சந்திரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சொர்ணம் நேற்று தீர்ப்பளித்தார்.