உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் அதிகாரம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அரி ராகவன் தெரிவித்துள்ளார்;
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலை தடை செய்து மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி NHAI உச்ச நீதிமன்றத்தை அணுக வாய்ப்புள்ளதால் மனுதாரர் பாலகிருஷ்ணன் சார்பில் கேவியட் மனுவை மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஏற்பாட்டில் இன்று (06-06-25) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். ஒருவேளை அவர்கள் அப்பீல் சென்றால் நமது தரப்பை கேட்காமல் உடனடியாக உச்சநீதிமன்றம் எந்த தீர்ப்பும் வழங்காது. இதன் மூலம் NHAI அதற்கு சாதகமான தீர்ப்பை உடனடியாக பெறுவதை தடுத்துள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.என மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அரி ராகவன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.