தேனி மாவட்டம் குமணன்தொழு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் நேற்று (ஜூன்5) கோகிலாபுரம் சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது நிலை தடுமாறிய அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பலகை மீது மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.