உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி பகுதியில் நேற்று (ஜூன் 5) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் பூபதி (68) என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 41 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் பூபதி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.